Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

காசாவின் வைத்தியசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்!

நவம்பர் 12, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

தெற்கு காசாவின் பிரதான வைத்தியசாலை மீது இரவோடு இரவாக இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் மற்றும் 13 வயதுச் சிறுவன் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக மருத்துவத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கான் யூனிஸ் (Khan Younis) பகுதியில் உள்ள நாசர் (Nasser) வைத்தியசாலையின் அறுவை சிகிச்சைப் பிரிவுகளைக் கொண்ட ஐந்து மாடிக் கட்டடத்தின் கூரையைத் துளைத்து இரண்டு ஏவுகணைகள் விழுந்ததில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளதுடன், காசாவின் 2 மில்லியன் மக்களில் அரைவாசிப் பேருக்குச் சேவையாற்றும் அறுவை சிகிச்சைப் பிரிவும் செயலிழந்துள்ளது.

உயிரிழந்தவர்களில், 2026ஆம் ஆண்டு வெளியான “அமெரிக்கன் டாக்டர்” (American Doctor) ஆவணப்படத்தில் இடம்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர் ரெசிக் அபுஷிரா (Rezik Abushira) மற்றும் 13 வயதுச் சிறுவன் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வியாழக்கிழமை (12.11.2026) இடம்பெற்ற வேறு சம்பவங்களில் மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரில் கார் ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.

மத்திய காசாவின் புரெய்ஜ் (Bureij) அகதிகள் முகாமில் இடம்பெற்ற இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இதன் மூலம் வியாழக்கிழமை இஸ்ரேல் தாக்குதலினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை ஒன்பதாக அதிகரித்துள்ளது.

வைத்தியசாலைத் தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம், ஹமாஸின் கான் யூனிஸ் படைப்பிரிவுத் தளபதியான முஹம்மது அபு இஸ்மாயில் (Muhammad Abu Ismail) என்பவரை இலக்கு வைத்ததாகத் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் நாசர் வைத்தியசாலை வளாகத்தைத் தலைமையகமாக மாற்றி அங்கிருந்து செயற்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், வைத்தியசாலையைத் தமது நடவடிக்கைகளுக்கான தளமாகப் பயன்படுத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் முன்வைத்த குற்றச்சாட்டை ஹமாஸ் அமைப்பு நிராகரித்துள்ளது.

காசா போர் ஆரம்பமானதிலிருந்து இஸ்ரேலிய இராணுவம் நாசர் வைத்தியசாலை வளாகத்தைக் குறைந்தது ஏழு தடவைகள் தாக்கியுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2025 ஒக்டோபரில் போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததிலிருந்து குறைந்தது 1,600 பாலஸ்தீனியர்களும், ஐந்து இஸ்ரேலியப் படையினரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா வான்வழித் தாக்குதல்!
அடுத்த செய்தி 2027 வரவு செலவுத் திட்டம்: வருமான வரி விலக்கு 162,500 ரூபாவாக உயர்வு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இந்தோனேசியாவில் மண்சரிவு – இருவர் உயிரிழப்பு

நவம்பர் 14, 2025
உலகம்

Quebec ல் நேர மாற்றம் குறித்து வெளியான அறிவிப்பு !

அக்டோபர் 22, 2024
அண்மைய செய்திகள்உலகம்

கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவின் பதவிகாலம் மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பு

ஏப்ரல் 13, 2024
அண்மைய செய்திகள்உலகம்

புனேயில் ஹெலிகொப்டர் விபத்து!

ஆகஸ்ட் 24, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?