இந்தியாவின் புனேவில் ஹெலிகொப்டர் விபத்திற்க்குள்ளான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த ஹெலிகொப்டர் தனியார் நிறுவனத்திற்க்கு சொந்தமானது என்பதுடன் மும்பையிலிருந்து ஹைதராபாத் செல்லும் வழியில் புனேவில் பாட் கிராமத்தில் இவ்வாறு விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் விமானி காயங்களுடன் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என புனே காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
வானிலை மாற்றத்தினால் இவ்விபத்து சம்பவித்துள்ளதாக இந்திய ஊடகம் அறிவித்துள்ளது.