இந்திய கிரிக்கெட் அணியின் வீரரொருவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார். இந்திய அணியின் சிறந்த கை பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் ஷிகர் தவான். இவர் கிரிக்கெட்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரராவார்.
2010 ஆம் ஆண்டில் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமான ஷிகர் தவான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணிக்காக 34 டெஸ்ட் போட்டி, 68 டி 20 போட்டிகள் மற்றும் 167 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
மேலும் ஷிகர் தவான் 50 ஓவர் போட்டிகளில் 6,793 ரன்களையும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2315 ரன்களையும் குவித்திருந்தார்.
மேலும் டெஸ்ட் போட்டிகளில் 7 சதங்களையும், ஒருநாள் போட்டியில் 17 சதங்களையும் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.