தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், மத்திய – மாநில அரசுகளுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு மற்றும் மாநில உரிமைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு கலைத்துள்ளது.
ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட இந்தக் குழு, ஆளுநரின் அதிகாரங்கள், மாநிலங்களின் நிதி உரிமைகள் மற்றும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பாகப் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.
இந்நிலையில், இந்தக் குழுவின் பணிகளுக்கும் தமிழக மாநில சட்ட ஆணையத்தின் பணிகளுக்கும் இடையே ஒற்றுமை இருப்பதால், தனியாகக் குழுவைத் தொடர வேண்டிய அவசியமில்லை என அரசு தெரிவித்துள்ளது.
இதனால், குழுவின் பணிகள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் மாநில சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த முடிவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதேவேளை, மாநில உரிமைகள் தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், அவை மாநில சட்ட ஆணையத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.
