கியூபெக் மாகாணத்தில் அமைந்துள்ளதும் மின்சார வாகனத்துக்கான மின்கலத்தைத் தயாரிப்பதுமான தொழிற்சாலைகளில் ஒன்று, மாக இந்தத் தொழிற்சாலைத் திட்டம் கடும் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.
மின்கலத்தைத் தயாரிக்கும் இத்திட்டத்தில் கியூபெக் அரசாங்கம் 1.2 பில்லியன் டொலர் பொதுப் பணத்தை முதலீடு செய்துள்ளது.
தற்போது, கியூபெக் மக்களுக்குச் சொந்தமான அந்தப் பணத்தின் நிலை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
தற்போதைய நிதி நெருக்கடியால் கியூபெக் அரசாங்கம் அந்தத் தொழிற்சாலையில் முதலீடு செய்துள்ள பெருந்தொகை நிதியின் பாதுகாப்பு குறித்து, எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் கட்டுமானப் பணிகளுக்காக இனி மேலதிகமாக பொதுப் பணத்தை ஒதுக்கப் போவதில்லை என்று, கியூபெக் மாகாண அரசாங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
