கனடாவின் சில மாகாணங்களில் இந்த ஆண்டு இலையுதிர் காலத்திலும் நுளம்புகளின் நடமாட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக Ontario மற்றும் Nova Scotia உள்ளிட்ட கிழக்கு கனடாவின் சில பகுதிகளில் ஒக்டோபர் மாத இறுதியிலும் நவம்பர் மாதத் தொடக்கத்திலும் நுளம்புகள் தொடர்ந்து காணப்படுகின்றன.
வழக்கமாக குளிர்காலம் நெருங்கும்போது நுளம்புகளின் எண்ணிக்கை குறைவடையும் நிலையில், இந்த ஆண்டு நீடித்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதமான காலநிலை காரணமாக அவற்றின் வாழ்நாள் நீடித்துள்ளதாக நிபுணர்கள் விளக்குகின்றனர்.
Toronto உள்ளிட்ட தெற்கு Ontario பகுதிகளில் நவம்பர் மாதத் தொடக்கத்திலும் 20 பாகை செல்சியஸை அண்மித்த வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
