கனடாவின் பிரதமர் மார்க் கார்னி தலைமையிலான அரசாங்கத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மத்திய வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
நிதியமைச்சர் François-Philippe Champagne இந்த வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அரசாங்கத்தின் கடன் சுமை, வீடமைப்பு, வேலைவாய்ப்பு, உட்கட்டமைப்பு மற்றும் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு ஆகியவை இந்த வரவு செலவுத் திட்டத்தில் முக்கிய கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக கனடாவின் நிதிப் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்க்கட்சியான Conservative கட்சி அரசாங்கத்திடம் கேள்விகளை எழுப்பி வருகின்றது.
அதேவேளை, வணிக நிறுவனங்களுக்கான வரிச் சலுகைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளும் எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்த வரவு செலவுத் திட்டம் கனடாவில் வாழும் குடும்பங்கள், தொழில்முனைவோர் மற்றும் புதிய முதலீட்டாளர்களுக்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.
