Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

இலங்கைக்குக் கடத்த முயன்ற கடல் அட்டைகள் தமிழகத்தில் மீட்பு

நவம்பர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற சுமார் ரூ.90 லட்சம் மதிப்பிலான 245 கிலோ பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்துள்ள நிலையில் தப்பியோடிய கடத்தல்காரரை தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தமிழக கடல் வழியாக பீடி இலைகள், மஞ்சள், கடல் அட்டைகள், கடல் பல்லிகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தடுக்க மத்திய, மாநில உளவுத்துறையினர், கடற்படை, கடலோர காவல்படை மற்றும் சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மண்டபம் கடல் வழியாக நாட்டுப்படகில் இலங்கைக்கு பதப்படுத்தப்பட்ட தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் கடத்தப்பட இருப்பதாக ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து உச்சிப்புளி பேருந்து நிலையம் அருகே சுங்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சோதனையில் நிற்காமல் சென்ற சந்தேகத்திற்கிடமான வாகனத்தை அதிகாரிகள் துரத்திச் சென்றனர்.

பிரப்பன்வலசை அருகே கடற்கரை பகுதியில் உள்ள பனந்தோப்புக்குள் வாகனத்தை விட்டுவிட்டு அதன் ஓட்டுநர் தப்பியோடியுள்ளார்.

இதையடுத்து வாகனத்தை சோதனையிட்ட அதிகாரிகள், அதில் மூட்டை மூட்டையாக பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் வாகனத்துடன் கடல் அட்டைகளை பறிமுதல் செய்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு எடைபோட்டதில் சுமார் 245 கிலோ தடை செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் இருந்தது தெரியவந்ததுள்ளது.

இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.90 லட்சம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், தப்பியோடிய நபர் யார் என்பது குறித்து பறிமுதல் செய்யப்பட்ட வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து சுங்கத்துறையினர் தீவிர விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

முந்தைய செய்தி களனி பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து
அடுத்த செய்தி ஹப்புத்தளை – பெரகலை பகுதிக்கு இடையில் மரம் முறிந்து சேதம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

யாழில். காய்ச்சலால் பாடசாலை மாணவி உயிரிழப்பு

ஆகஸ்ட் 8, 2025
அண்மைய செய்திகள்ஆன்மீகம்

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 4 ஏப்ரல் 2025

ஏப்ரல் 4, 2025
1
இலங்கை

யாழில் 17 சபைகளையும் கைப்பற்றுவோம் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

மார்ச் 13, 2025
அண்மைய செய்திகள்உலகம்

இஸ்ரேல் ஈரான் தாக்குதலில் பாதிப்படையும் எண்ணெய் உற்பத்தி….

மே 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?