கொழும்பு – பதுளை பிரதான வீதியில், ஹப்புத்தளைக்கும் பெரகலைக்கும் இடைப்பட்ட ஐஸ்பீலி பகுதியில் நேற்று (02) நள்ளிரவு சுமார் 12 மணியளவில் பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
இதனால் குறித்த வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதுடன், சிறிய ரக வாகனங்கள் மாத்திரம் பயணிக்கக்கூடிய நிலை காணப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், மரத்தை வெட்டி அகற்றி, வாகனங்கள் பயணிப்பதற்கான பாதையை ஏற்படுத்தினர்.
இச்சம்பவத்தினால் 33,000 வோல்ட் மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய மின்கம்பமொன்று முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளதுடன், மற்றுமொரு மின்கம்பமும் சரிந்து விழுந்துள்ளது.
தற்போது வீதியில் விழுந்த மரம் அகற்றப்பட்டு, வீதிப் போக்குவரத்து வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கிடையில், சேதமடைந்த மின்கம்பங்களைப் புதிதாகப் பொருத்தி, மின்சார விநியோகக் கட்டமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் இலங்கை மின்சார சபையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
