Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

கியூபெக்கில் மாணவர்களுக்கு மத அடையாளத் தடை: மனிதஉரிமை அமைப்புகள் எதிர்ப்பு!

அக்டோபர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

கியூபெக்கில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள புதிய சிறுபான்மை அரசாங்கம், பாடசாலை மாணவர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடைசெய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முனையும் நிலையில், அதற்கு மனித உரிமை அமைப்புகளும் பல்வேறு மதத் தலைவர்களும் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கியூபெக்கின் புதிய கல்வி அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோயல் அர்செனோ (Joël Arseneau), ஆரம்பப் பாடசாலை மாணவர்கள் மத அடையாளங்களை அணிவதைத் தடை செய்வது தொடர்பான தேர்தல் வாக்குறுதியில் உறுதியாக இருப்பதாகவும், அதனை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்.

இது தமது தரப்பின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்று எனவும், இதில் சமரசத்திற்கு இடமில்லை எனவும் புதிய கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

ஏற்கெனவே ஆட்சியில் இருந்த ‘கொஅலிசியன் அவனிர் கெபெக்’ (CAQ) அரசாங்கம், ஆசிரியர்கள் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் மத அடையாளங்களை அணியத் தடை விதிக்கும் மதச்சார்பின்மைச் சட்டங்களை அமுல்படுத்தியிருந்தது.

இந்தச் சட்டத்திaற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தற்போது நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதுடன், இதற்கான தீர்ப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, கியூபெக் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு ‘கியூபெக் முஸ்லிம்களின் தேசிய பேரவை’ (CNQM) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அப்பேரவையின் தலைமைச் நிர்வாகி ஸ்டீபன் பிரவுன் (Stephen Brown) கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் திட்டம் சிறுபான்மையினக் குழந்தைகளின் மதச் சுதந்திரம், சமத்துவக் கல்வி உரிமை மற்றும் சமூக உரிமைகளைப் பறிப்பதாக அமைந்துள்ளது என்றும், குழந்தைகளை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்தும் வகையில் இத்தகைய கொள்கைகள் காணப்படுகின்றன என்றும் கவலை வெளியிட்டுள்ளார்.

முந்தைய செய்தி தரவு மையங்களுக்கான மின் கட்டணத்தை உயர்த்த ஹைட்ரோ-கியூபெக் முடிவு!
அடுத்த செய்தி அமெரிக்கா – ஈரான் பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

மொன்றியலில் கடும் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூர் குடியிருப்பாளர்கள்

ஆகஸ்ட் 12, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு பிள்ளையாரடியில் குடியிருப்புக்குள் புகுந்த 8 அடி நீள முதலை

செப்டம்பர் 5, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கான விடுமுறையை அறிவித்த கல்வி அமைச்சு…

ஏப்ரல் 24, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை….

மே 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?