Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

ஸ்பெயின் ரயில் விபத்து: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69ஆக உயர்வு!

அக்டோபர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஸ்பெயினின் டோலிடோ (Toledo) மாகாணத்தில் உள்ள உர்தா (Urda) பகுதியில் இடம்பெற்ற அதிவேக ரயில் விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளதாகப் பிராந்தியத் தலைவர் எமிலியானோ கார்சியா-பேஜ் (Emiliano Garcia-Page) தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான ரயிலின் சிதைந்த பகுதிகளை நள்ளிரவிலும் கிரேன்கள் (cranes) மூலம் அகற்றி, மீட்புக் குழுவினர் தீவிரத் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் 57 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இவ்விபத்தில் 7 நாடுகளைச் சேர்ந்த 42 வெளிநாட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தபட்சம் 7 பேர் காயமடைந்துள்ளனர்.

சிக்னல் கோளாறு காரணமாகச் சில ரயில்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நிறுத்தப்பட்டிருந்த ரயிலைக் கவனிக்காமல் மற்றொரு ரயிலுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டதே இந்த விபத்துக்குக் காரணம் எனப் போக்குவரத்து அமைச்சர் ஒஸ்கார் புவெந்தே (Oscar Puente) தெரிவித்துள்ளார்.

இந்தத் தவறான அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து ரயில்வே பாதுகாப்பைப் பலப்படுத்தக் கோரி ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தினர் (SEMAF) வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதனால் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, உயிரிழந்தவர்களுக்காக ஸ்பெயின் அரசு மூன்று நாட்கள் தேசிய துக்க தினத்தை அறிவித்துள்ளதுடன், வரவிருக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போப் லியோ (Pope Leo) தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் இருந்து 2 கிலோமீற்றர் சுற்றளவுக்குப் பொதுமக்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டு விசாரணைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முந்தைய செய்தி பிரான்சில் இனவெறிச் சூழலை உருவாக்கும் வலதுசாரி அரசியல்: பிரான்ஸ் அதிபர் குற்றச்சாட்டு!
அடுத்த செய்தி ரூ.14,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்உலகம்

விண்வெளியிலிருந்து தேர்தலில் வாக்களிக்கவுள்ள சுனிதா.

செப்டம்பர் 14, 2024
அண்மைய செய்திகள்உலகம்

கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது சீனக் கப்பல்

மார்ச் 25, 2026
உலகம்

பாகிஸ்தானைச் சேர்ந்த 4 நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை

டிசம்பர் 20, 2024
உலகம்

ஈரான் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஜூலை 3, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?