கியூபெக் மாகாணத்தில் உள்ள போப்போர்ட் (Beauport) பகுதியில், காப்பகம் ஒன்றை நடத்தி வந்த பெண் பணியாளர் ஒருவர், 14 மாதக் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில், தமக்கு மேல் சுமத்தப்பட்ட படுகொலை குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுமியின் கொலை வழக்கில், கியூபெக் நகர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை தொடங்கவிருந்த நிலையில், காப்பகப் பணியாளரான கெனுயிட் முப்வாகா (Guenuite Mubwaka) படுகொலை குற்றச்சாட்டை நீதிபதி முன்பு ஒப்புக்கொண்டார்.
காப்பகத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கேமராக்களின் (CCTV) பதிவுகளை ஆய்வு செய்ததில், அந்தப் பணியாளர் பல மாதங்களாகவே பாதிக்கப்பட்ட குழந்தையைத் துன்புறுத்தி வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், காப்பகத்தில் கைப்பற்றப்பட்ட கேமரா பதிவுகளை ஆய்வு செய்த புலனாய்வாளர்கள், இந்தக் காப்பகப் பணியாளர் மேலும் இரண்டு குழந்தைகளையும் குறிவைத்துத் துன்புறுத்தியுள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இந்த நிலையில், இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

