Air Canada விமானப் பணிப்பெண்கள் விமான நிறுவனத்தின் சமீபத்திய ஊதிய சலுகைக்கு எதிராக பெருமளவில் வாக்களித்ததாக அவர்களின் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது .
இந்த வாக்கெடுப்பு விமான நடவடிக்கைகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் ஏர் கனடா(Air Canada) விமான நிறுவனத்தில் நடந்த வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த தற்காலிக ஒப்பந்தத்தில், பெரும்பாலான ஜூனியர் விமானப் பணிப்பெண்களுக்கு இந்த ஆண்டு 12 சதவீத சம்பள உயர்வும், அதிக மூத்த உறுப்பினர்களுக்கு எட்டு சதவீத சம்பள உயர்வும், அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறிய உயர்வுகளும் அடங்குகிறது.
கனேடிய பொது ஊழியர் சங்கம் (CUPE) ஒரு அறிக்கையில், 99.1 சதவீத உறுப்பினர்கள் இந்த திட்டத்தை நிராகரித்ததாகவும், விமானப் பணிப்பெண்கள் இன்னும் கூட்டாட்சி குறைந்தபட்ச ஊதியத்தை விட குறைவாகவே பெறுவார்கள் என்று வாதிட்டதாகவும் கூறியமை குறிப்பிடத்தக்கது.


