ஆபத்தான மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
தனது பேஸ்புக் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்ட பிரதி அமைச்சர், சத்தமாகவும், மாறுபட்ட ஒலியெழுப்பிகளுடனும், வெவ்வேறு வண்ணங்களில் ஒளிரும் விளக்குகள் வாகனங்களின் முன், பின் மற்றும் பக்கவாட்டில் விளம்பரங்களைக் காட்சிப்படுத்துதல் போன்றவற்றுடன் இயக்கப்படும் வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
