மொன்றியல் நகரின் வெஸ்ட் ஐலாண்ட் பகுதியில் உள்ள டோர்வால் (Dorval) புறநகரில் வீதியைக் கடந்துகொண்டிருந்த முதியவர் ஒருவர் எஸ்.யூ.வி (SUV) வாகனம் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 69 வயது உடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலை 7 மணி மணியளவில், சந்திப்புப் பகுதிக்கு அருகில் சாலையைக் கடக்க முயன்ற அவரை, எஸ்.யூ.வி (SUV) வாகனத்தைச் செலுத்திய சாரதி கவனிக்கத் தவறியுள்ளார்.
இதனால் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.
புதன்கிழமை இரவு நிகழ்ந்த இந்த விபத்து குறித்து விசாரணை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டமை குறிப்பிடத் தக்கது.

