கியூபெக் மாகாணத்தின் 34ஆவது முதலமைச்சராக பதவியேற்றுள்ள ‘Parti Québécois’ கட்சியின் தலைவர் பால் சென்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon) மாகாணத்தின் நிதிப்பற்றாக்குறையைக் குறைப்பதற்கும், கியூபெக்கின் சுதந்திரம் குறித்த எதிர்காலப் பொது வாக்கெடுப்புக்குத் தயாராவதற்கும் தமது அரசாட்சி முன்னுரிமை அளிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாட்சியில் அமைச்சர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் தனது தேர்தல் வாக்குறுதிக்கு இணங்க, முந்தைய அரசாங்கங்களை விடச் சிறிய அளவிலான அமைச்சரவையை அவர் அமைத்துள்ளார்.
இந்த அமைச்சரவையில் முதலமைச்சரையும் சேர்த்து 9 பெண்களும் 14 ஆண்களும் இடம்பெற்றுள்ளனர்.
வீடற்றோர் நலத்துறை அமைச்சினை பிளமொண்டன் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
மேலும், கடந்த தேர்தலில் தோல்வியடைந்த ‘Parti Québécois’ கட்சியின் முக்கிய உறுப்பினரான பாஸ்கல் பராடிஸ் (Pascal Paradis), அரசுத்தரப்பு தூதராகவும் தலைமைப் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவுடனான உறவுகள் மற்றும் பழங்குடி மக்கள் விவகாரங்களைக் கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

