Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்இலங்கை

மன்னாரில் குடிநீர் தட்டுப்பாடு – அரச அதிபரிடம் மகஜர் கையளிப்பு

அக்டோபர் 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்கமம் கிராமத்திற்கு குடிநீர் இணைப்பையும், சீரான நீர் விநியோகத்தையும் வழங்குமாறு கோரி, கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர்.

உயிலங்குளம் புதுக்கமம் மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள், இன்று காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்குச் சென்று மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.

புதுக்கமம் கிராமத்தில் சுமார் 130 குடும்பங்கள் வசித்து வருகின்ற நிலையில், நாளாந்தம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகச் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு கோரி, ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னார் பிரதேச செயலகத்திற்கு கடிதங்கள் கையளிக்கப்பட்ட போதிலும், இதுவரை உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும், தமது கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவிலேயே பிரதான குடிநீர்க் குழாய் அமைந்துள்ளதாகவும், அங்கிருந்து கிராமத்திற்கு குடிநீர் இணைப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைந்து முன்னெடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தக் குடிநீர்ப் பிரச்சினை தொடர்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் பிரதேச சபை உறுப்பினர் லூக்கஸ் சோபனா அலெக்சாண்டரிடம் கிராம மக்கள் கோரிக்கை முன்வைத்திருந்தனர்.

அதன் தொடர்ச்சியாகவே, மாதர் கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து மகஜரைக் கையளித்துள்ளனர்.

புதுக்கமம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வு காண அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது.

முந்தைய செய்தி யாழ்ப்பாணத்தில் புதிய மோட்டார் சைக்கிள் பதிவுச் சேவை ஆரம்பம்
அடுத்த செய்தி நாட்டில் மூன்று நாட்களுக்கு ஒரு மணிநேர மின்வெட்டு கோரிக்கை!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

மொன்றியல் தமிழ் புத்தக அரங்கம் 2026

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

அம்பலாங்கொடையில் கைதான 75 இளைஞர்கள்

ஜூன் 7, 2026
இலங்கை

நாயாறு படகு சேவை தற்காலிகமாக நிறுத்தம்(Video)

டிசம்பர் 9, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

செம்மணியில் நாளைய தினம் அகழ்வுப்பணி ஆரம்பம்

மே 14, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் கைது!

டிசம்பர் 30, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?