வவுனியா பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் நேற்றைய தொடக்கம் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
மீன்களின் இறப்பிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் குறித்த நீர்த்தேக்கத்தில் மீன்பிடியில் ஈடுபடுபவதை தற்போதைக்கு தவிர்க்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
.மேலும் ,பொதுமக்கள் குறித்த நீர்த்தேக்கத்தில் பிடிக்கப்பட்ட மீன்களை வாங்குவதை முற்றுமுழுதாக தவிர்க்குமாறும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபை தவிசாளர் பா.பாலேந்திரன் அறிவித்துள்ளார்.
இதனால் மீனவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது
