அல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள சி.எப்.பி. வெயின்ரைட் (CFB Wainwright) இராணுவத் தளத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் நான்கு இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் குறைந்தது 19 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெயின்ரைட் இராணுவத் தளத்தில் நடைபெற்ற இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளின்போது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயைப் போன்ற பரவலான தீ விபத்தால் வீரர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பயிற்சியின் ஒரு பகுதியாக வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்ட நிலையில், திடீரென மாறிய கடுமையான காற்று திசையே இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்று இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த நான்கு வீரர்களின் விபரங்களை கனேடிய ஆயுதப் படைகள் வெளியிட்டுள்ளன.
அதன்படி, பிரிட்டிசு கொலம்பியாவைச் சேர்ந்த எய்டன் கூல்டிங் (Pte. Aidan Goulding) மற்றும் ஹைடன் லீக்கேமார்க் (Pte. Hayden Lykkemark), சஸ்காட்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த ஷான் ஃபாரல் (Pte. Shaun Farrell), மற்றும் எட்மண்டன் நகரைச் சேர்ந்த சஞ்சீவ் மோர்கன் வோங் (Sgt. Morgan Wong) ஆகியோரே உயிரிழந்த வீரர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் துயரச் சம்பவம் குறித்துப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத் தக்கது.

