Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

கனடாவில் LNG திட்டத்துக்கு எதிர்ப்பு – மூன்று பழங்குடி சமூகங்கள் வலியுறுத்தல்

அக்டோபர் 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஒன்ராறியோவை கியூபெக்குடன் இணைக்கும் பாரிய திரவ இயற்கை எரிவாயு (LNG) செயற்றிட்டத்தை இடைநிறுத்துமாறு, கோரப்பட்டுள்ளது.

 கியூபெக்கிலுள்ள மூன்று இனனு (Innu) பழங்குடி சமூகங்கள் இக்கோரிக்கையை விடுத்துள்ளன.

தங்களது பூர்வீக நிலப் பரப்புகளின் ஊடாகச் செல்லும் இச்செயற்றிட்டம் குறித்து தம்முடன் எத்தகைய ஆலோசனையும் நடத்தப்படவில்லை என அவை குற்றம் சாட்டியுள்ளன.

கிழக்கு ஒன்ராறியோவை கியூபெக்கின் கோட்-நோர் (Côte-Nord) பகுதியுடன் இணைக்கும் இப் பெருந் திட்டத்தின் ஊடாக, ஆண்டுதோறும் 15 மில்லியன் தொன் திரவ இயற்கை எரிவாயு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

இதற்கான முனையமானது கியூபெக்கின் பே-கோமோ (Baie-Comeau) பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

இச்செயற்றிட்டமானது கியூபெக் மற்றும் ஒன்ராறியோவில் உள்ள பழங்குடிச் சமூகங்களின் பாரம்பரிய நிலங்களில், பழங்குடியினரின் சொந்த உரிமையின் கீழ் உருவாக்கப்படுவதாக ‘கினோ அஸ்கி எல்.என்.ஜி’ (Kino Aski LNG) நிறுவனம் தனது இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

எனினும், கோட்-நோர் மற்றும் சகுனே லாக்-சின்-ழான் (Saguenay Lac-Saint-Jean) பகுதிகளைச் சேர்ந்த எசிபிட் (Essipit), மாஷ்டெயுயாட்ச் (Mashteuiatsh) மற்றும் பெசமிட் (Pessamit) ஆகிய மூன்று பழங்குடி சமூகங்கள் அந்த நிறுவனத்தின் கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளன.

தாங்கள் இச்செயற்றிட்டத்துடன் எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை எனவும், இதற்கு இதுவரை தாம் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்த அந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கவில்லை எனவும் அந்த மூன்று பழங்குடி சமூகங்களும் தெளிவுபடுத்தியுள்ளன.

முந்தைய செய்தி மொன்றியலில் பெண் படுகொலை – 33 வயது நபர் கைது!
அடுத்த செய்தி யாழில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்

செயிண்ட் மிஷேல் பகுதியில் வன்முறைத் தாக்குதல் – இருவர் படுகாயம்

ஆகஸ்ட் 14, 2026
கியூபெக்

பிரெஞ்சை காரணம் காட்டி ஆங்கில வாக்காளர்களின் உரிமையை பறிக்கக்கூடாது” – லிபரல் தலைவர்

செப்டம்பர் 16, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

West Island வரை பயணத்தை ஆரம்பிக்கும் மொன்றியல் REM ரயில் சேவை.

ஏப்ரல் 15, 2026
அண்மைய செய்திகள்கியூபெக்

வாடகைவீடுகளில் செல்லப்பிராணிகளுக்கு தடை!

அக்டோபர் 15, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?