டிப்பர் ரக வாகனங்களை நிதி நிறுவனங்களில் இருந்து குத்தகை அடிப்படையில் பெற்று அவற்றின் பகுதிகளை பிரித்து விற்பனை செய்த ஒருவர் வவுனியா மாவட்ட குற்றவிசாரணை பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார்.
இது தொடர்பான முறைப்பாடுகள் பொலிசாருக்கு வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து விசாரணைகளை முன்னெடுத்த பொலிசார் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து ஒருவரை கைதுசெய்துள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தொடர்ச்சியாக பல டிப்பர் வாகனங்களை இவ்வாறு கொள்வனவு செய்து அதன் பகுதிகளை பிரித்து விற்பனை செய்துவந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்டவரிடம் இருந்து வாகனத்தின் இயந்திர அடிச்சட்டங்கள் ஒரு தொகை கைப்பற்றப்பட்டதுடன் அவர் நீதிமன்றில் முற்ப்படுத்தப்பட்டிருந்தார்.
குறித்த கைது நடவடிக்கை மாவட்ட குற்றவிசாரணை பிரிவின் உப பரிசோதகர் ராஜகுரு தலைமையில் சாஜன்களான ரூபசிங்க, அசங்க,மற்றும் ரெயினோல், றொசான்,மிதுசன்,சுபுண் ஆகியோரை உள்ளடக்கிய பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டது.
