Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கியூபெக்

பார்ட்டி கியூபெக்வா வெற்றி: அதிரடி நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர்

அக்டோபர் 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கியூபெக் மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ள பார்ட்டி கியூபெக்வா (Parti Québécois – PQ) கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமண்டன், தாம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உடனடி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.

தேர்தல் முடிவுகள் வெளியாகி சிறுபான்மை அரசாங்கத்தை அமைப்பது உறுதியான நிலையில், நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தாம் அனைத்து கியூபெக் மக்களுக்குமான அரசாங்கத்தை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தமது புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள முக்கிய நடவடிக்கைகள் குறித்துப் பேசிய அவர், மாகாணத்தில் வீடற்றோர் எண்ணிக்கையை பாதியாகக் குறைப்பதே புதிய அரசின் முதன்மை இலக்கு என்றும், இதற்காக விசேட உச்சி மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கியூபெக் மாகாணத்தில் உணவுப் பஞ்சத்தைப் போக்கும் உணவு வங்கிகளுக்கான (Food Banks) நிதியுதவி ஆண்டிற்கு 5 மில்லியன் டொலர்களால் அதிகரிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அமைச்சரவையின் அளவைக் குறைப்பதுடன், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச நிறுவன உயர் அதிகாரிகளின் சம்பளத்தைக் கட்டுப்படுத்தும் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்றும் கூறினார்.

கியூபெக் மாகாணத்தின் வரி முறைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்த அவர், எரிபொருள் மீதான வரி குறைக்கப்படுவதுடன், பயன்படுத்தப்பட்ட பொருட்கள் (Used goods) மீதான வரி முழுமையாக நீக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைக் கையாளத் தனியாக ஒரு குழு அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கியூபெக் மாகாண சட்டமன்றத்தில் பார்ட்டி கியூபெக்வா கட்சி 59 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

பெரும்பான்மை ஆட்சிக்கு 64 ஆசனங்கள் தேவை என்ற நிலையில், அக்கட்சி சிறுபான்மை அரசாங்கத்தையே அமைக்கவுள்ளது.

சார்ள்ஸ் மிலியார்ட் தலைமையிலான கியூபெக் லிபரல் கட்சி 40 ஆசனங்களைப் பெற்று முதன்மை எதிர்க்கட்சியாகச் செயல்படவுள்ளது. லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் கட்சிகளிடமிருந்து எதிர்ப்புகள் எதிர்பார்க்கப்பட்டாலும், கியூபெக் சோலிடேர் (QS) கட்சியுடன் இணைந்து செயல்பட முடியும் என நம்புவதாக பிளமண்டன் தெரிவித்தார்.

எனினும், தங்களது ஆதரவு நிபந்தனையற்றது அல்ல என்று கியூபெக் சோலிடேர் கட்சியின் இணைப் பேச்சாளர் ரூபா கசால் தெளிவுபடுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி ருவாண்டாவிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு விடுதலை
அடுத்த செய்தி தேசத்துரோக குற்றச்சாட்டு: ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கைது

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கியூபெக்

மொன்றியல் நகைக்கடைகளில் கொள்ளை – 5 ஆண்டுகளில் மூன்று மடங்காக அதிகரிப்பு!

அக்டோபர் 2, 2026
கியூபெக்முதன்மை செய்தி

பெல் சென்டர் வளாகத்தில் அதிகாரி மொஹமட் லெமினுக்கு இறுதிச்சடங்கு

ஜூலை 1, 2026
கியூபெக்முதன்மை செய்தி

கியூபெக்கில் பெண்களின் கோரிக்கைகள் பல நிராகரிப்பு

பிப்ரவரி 10, 2026
அண்மைய செய்திகள்இலங்கை

பாடசாலை சிற்றுண்டிசாலைகளில் ஆரோக்கிய உணவு விற்பனையை உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு ஆளுனரிடம் கோரிக்கை

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?