Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

தேசத்துரோக குற்றச்சாட்டு: ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவர் கைது

அக்டோபர் 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

ஜெர்மனியின் முன்னாள் உளவுத்துறைத் தலைவரும், உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தின் முன்னாள் மாநிலச் செயலாளருமான 80 வயதான ஆகஸ்ட் ஹானிங் (August Hanning), தேசத்துரோகம் மற்றும் ஒற்றாடல் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியின் நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பாரிய ஒற்றாடல் சர்ச்சையாக இது பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தொடர்புகளைப் பேணி, அரசு ரகசியங்களைப் பெற்றுக் கொடுத்து தேசத்துரோகத்தில் ஈடுபட முயன்றதாக ஜெர்மன் கூட்டாட்சி அரசுத் வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மூன்ஸ்டர் நகருக்கு அருகில் உள்ள நோர்ட்வால்டே பகுதியில் அமைந்திருந்த அவரது வீட்டில் வைத்து, முகமூடி அணிந்த பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டார்.

1998 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஜெர்மனியின் கூட்டாட்சி உளவு அமைப்பின் (BND) தலைவராகப் பணியாற்றிய ஹானிங், பின்னர் 2009 ஆம் ஆண்டு வரை உள்நாட்டலுவல்கள் அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாகச் செயலாற்றினார்.

ஓய்வுக்குப் பிறகு தனியார் ஆலோசனைக் சேவைகளை வழங்கி வந்த இவர், உளவுத்துறை தரவுகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு பகுப்பாய்வு அறிக்கைகளைத் தயாரிக்க முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கூட்டாட்சி உளவு அமைப்பின் முன்னாள் பணியகத் தலைவரான “மேன்ஃப்ரெட் டி” (Manfred D) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டிலிருந்து, பணப் பிரதிபலனுக்காக சுமார் 2,000 ரகசிய ஆவணங்களை ஹானிங்கிற்கு “மேன்ஃப்ரெட் டி” தொடர்ச்சியாக வழங்கி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கசிந்த ஆவணங்களில் ஈரானின் அணுசக்தித் திட்டம், ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நட்பு நாடுகளின் ரகசியத் தகவல்கள் அடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், அஜர்பைஜான் மற்றும் இஸ்ரேலிய உளவு அமைப்புகளுடனும் ஹானிங்கிற்கு தொடர்புகள் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

தொழிலதிபர் கிறிஸ்டினா பிளாக் என்பவரின் “குழந்தைகள் கடத்தல் வழக்கை” விசாரித்தபோதே, ஹானிங்கின் இந்த ஒற்றாடல் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.

விவாகரத்து பெற்ற கணவரிடமிருந்த குழந்தைகளைக் கடத்துவதற்காக, இஸ்ரேலின் தனியார் உளவு நிறுவனத்துடன் கிறிஸ்டினாவை ஹானிங் இணைத்து வைத்ததாகவும் குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன.

இவ்விவகாரத்தில் உளவுத்துறைக்குள்ளேயே தீவிர விசாரணை நடத்தப்பட்ட பின்னரே வழக்கு தொடரப்பட்டதாகவும், உள்நாட்டுப் பாதுகாப்பில் எந்தவொரு விட்டுக் கொடுப்பிற்கும் இடமில்லை என்றும் கூட்டாட்சி உளவு அமைப்பின் தற்போதைய தலைவர் மார்ட்டின் ஜெய்கர் வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய செய்தி பார்ட்டி கியூபெக்வா வெற்றி: அதிரடி நடவடிக்கைகளில் புதிய முதலமைச்சர்
அடுத்த செய்தி ஞானேஷ் குமாருக்கு எதிராக டெல்லியில் எதிர் கட்சியினரின் பேரணி

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீ விபத்து: 15 குழந்தைகள் பலி

ஆகஸ்ட் 26, 2026
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் எரிபொருள் கொள்கலன் வெடிப்பு – 147 பேர் உயிரிழப்பு

அக்டோபர் 17, 2024
உலகம்

மீள திறக்கப்பட்ட ரஃபா எல்லை கடப்பு

மார்ச் 19, 2026
அண்மைய செய்திகள்உலகம்

நைஜீரியாவில் தற்கொலை குண்டு தாக்குதல்- 18 பேர் உயிரிழப்பு!

ஜூலை 1, 2024
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?