பாகிஸ்தானிலுள்ள மைக்ரோசொப்ட் நிறுவனம் 25 வருட செயற்பாடுகளுக்குப் பிறகு பாகிஸ்தானை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது.
ஜூன் 2000 இல் பாகிஸ்தானில் தனது பணியைத் தொடங்கிய மென்பொருள் நிறுவனமான, மைக்ரோசொப்ட் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக அதன் பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் செயற்பாடுகளை படிப்படியாகக் குறைத்து வருவதாகக் கூறப்படுகிறது.
மைக்ரோசொப்ட் பாகிஸ்தானின் நிறுவனத் தலைவரான ஜவ்வாத் ரெஹ்மானின் LinkedIn பதிவில் இந்தச் செய்தி வெளியிடப்பட்டது. நிறுவனத்திடமிருந்து முறையான பொது அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
பாகிஸ்தானில் ஒரு சிறிய தொடர்பு அலுவலகம் மற்றும் சுமார் ஐந்து ஊழியர்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், முழு செயற்பாடுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.