Ontario மாகாணத்தைச் சேர்ந்த Air Ambulance விமானம் ஒன்று சனிக்கிழமை காணாமல் போன நிலையில், அமெரிக்க Coast Guard விமானத்தை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
Gulfstream G100 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானத்தில், நான்கு கனேடியர்கள் உட்பட மொத்தம் 6 பேர் பயணித்துள்ளனர்.
Bermuda-விலுள்ள L.F. Wade International Airport விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம், Boston-இல் உள்ள Logan International Airport-க்கு அதிகாலை சென்றடைய திட்டமிடப்பட்டிருந்ததாக அமெரிக்க Federal Aviation Administration தெரிவித்துள்ளது.
C-GRJP என்ற பதிவு இலக்கத்தைக் கொண்ட இந்த விமானம், Ontario-வைச் சேர்ந்த Latitude Air Ambulance நிறுவனத்துக்குச் சொந்தமானது. இந்த நிறுவனம் Hamilton-இல் உள்ள John C. Munro Hamilton International Airport-ஐ தளமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
விமானம் தொடர்பான தேடல் மற்றும் மீட்பு எச்சரிக்கையை அமெரிக்க FAA அதிகாலை 1.20 மணியளவில் வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, Rescue Coordination Center மற்றும் அமெரிக்க Coast Guard உடன் இணைந்து விமானத்தை கண்டுபிடிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக FAA தெரிவித்துள்ளது.
மேலும், Massachusetts மாநிலத்தின் Nantucket தீவுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியில் அமெரிக்க Coast Guard விமானங்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதன் Northeast Division தெரிவித்துள்ளது.

