கனடாவின் ஊடகத்துறையிலும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
AI மூலம் உருவாக்கப்படும் செய்தி உள்ளடக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஊடகவியலார்கள் தொடர்பான விவாதங்கள் தற்போது கனடாவில் கவனம் பெற்றுள்ளன.
சமீபத்தில் Montreal-ல் நடைபெற்ற All-In 2026 AI conference-லும் AI மற்றும் ஊடகம் தொடர்பான பல்வேறு விவாதங்கள் இடம்பெற்றிருந்தன.
கனடாவில் சில ஊடக நிறுவனங்கள் தற்போதுசெயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஊடகவியலார்கள் உள்ளடக்கம் உருவாக்கும் முறைகளை பரிசோதித்து வருகின்றன.
இதனால் செய்திகளை தயாரிக்கும் வேகம் அதிகரிக்கலாம் என்ற கருத்து ஒருபுறம் இருக்க, செய்திகளின் துல்லியம், வெளிப்படைத்தன்மை மற்றும் செய்தியாளர்களின் பொறுப்பு தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
AI உருவாக்கிய உள்ளடக்கம் மற்றும் மனித செய்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட செய்தி ஆகியவற்றை கேட்போர் அல்லது வாசகர்கள் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் வெளிப்படைத்தன்மை தேவைப்படுவதாக ஊடகத்துறை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

