Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இந்தியா

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டவர்களை சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை

அக்டோபர் 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

இந்தியாவில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (SIR) நடவடிக்கை நிறைவடைந்துள்ள மாநிலங்களில், தவறாக நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாநில தேர்தல் ஆணையங்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்த இந்த நடவடிக்கையின் மூலம் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.

எதிர்க்கட்சிகளின் கூற்றுப்படி, 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 13.8 கோடி (14.6 சதவீதம்) வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இக்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ‘படிவம் 6’ மூலம் பட்டியலில் இருந்து தவறாக நீக்கப்பட்ட தகுதியுள்ள வாக்காளர்களை மீண்டும் சேர்க்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் படி, வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் (BLO) தீவிர திருத்த நடவடிக்கைக்கு முந்தைய மற்றும் பிந்தைய வாக்காளர் பட்டியல்களை ஒப்பிட்டு, விடுபட்டவர்களைக் கண்டறிவார்கள்.

பின்னர் அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று அவர்களின் தற்போதைய நிலையைச் சரிபார்த்து, தகுதியுடையவர்களாக இருந்தால் ‘படிவம் 6’ மூலம் மீண்டும் பதிவு செய்ய உதவுவர். சுமார் ஒரு மாதத்தில் இந்த முழு செயல்முறையையும் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதுடன், புதிதாகப் பதிவுசெய்த வாக்காளர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் பகிரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியாக, வாய்ப்பைத் தவறவிட்ட தகுதியுள்ள வாக்காளர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்குவதற்காக சிறப்பு வாக்குச்சாவடி முகாம்களும் ஏற்பாடு செய்யப்படும் என தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியலில் எதிர்வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு!
அடுத்த செய்தி கனடாவின் ஊடகத்துறையில் அதிகரிக்கும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இந்தியா

இலங்கை தமிழர்களின் நலன் குறித்து விஜய் பேச்சு

ஏப்ரல் 16, 2026
இந்தியா

அரசுத்திட்டங்களின் பலன்களைத் அனைவருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் – பிரதமர் மோடி

செப்டம்பர் 23, 2026
இந்தியா

ஜார்க்கண்டில் மாணவர்கள் மீது தடியடி: பாஜக சார்பில் மாநிலம் தழுவிய பந்த் போராட்டம் அறிவிப்பு

ஆகஸ்ட் 10, 2026
இந்தியா

திருவள்ளூர் ஆலை அமோனியா கசிவு: உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ₹10 லட்சம் வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 6, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?