மொன்றியால் பகுதியில் இன்று பெரும்பாலும் வெயிலான வானிலை நிலவுகிறது. Environment Canada வெளியிட்டுள்ள தகவலின்படி, இன்று காலை 11 மணியளவில் Montréal-Trudeau International Airport பகுதியில் 13°C வெப்பநிலை பதிவாகியுள்ளது.
வானம் பெரும்பாலும் தெளிவாக காணப்படுவதுடன், வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு சுமார் 11 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுகிறது. இன்று பகல் நேரத்தில் அதிகபட்சமாக 16°C வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இரவு வெப்பநிலை சுமார் 6°C வரை குறையும். இதற்கிடையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வானம் படிப்படியாக மேகமூட்டமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 17°C வரை இருக்கும் நிலையில், இரவு நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் ஒக்டோபர் 5ஆம் திகதி திங்கட்கிழமை, மொன்றியால் பகுதியில் மழை பெய்யும் என Environment Canada தற்போது கணித்துள்ளது.
அன்றைய தினம் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 12°C ஆகவும், இரவு நேரத்தில் வெப்பநிலை 4°C வரை குறையவும் வாய்ப்புள்ளது.
எனவே, வரும் நாட்களில் மொன்றியால் பகுதியில் வெப்பநிலை குறைவாகவும், மழையுடனான காலநிலை நிலவக்கூடியதாகவும் இருக்கும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

