மொன்றியல் நோர்த் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று இரவு திட்டமிட்ட மின்தடை இடம்பெறவுள்ளது. ஜட்ரோ -கியூபெக் மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகளின் இரண்டாம் கட்டமாக, இன்று இரவு 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை சுமார் 7,400 வாடிக்கையாளர்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
மொன்றியல் நோர்த் , Saint-Léonard மற்றும் Rivière-des-Prairies–Pointe-aux-Trembles பகுதிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
குளிர்காலத்திற்கு முன்னதாக மின்சார கட்டமைப்பை பராமரித்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெரிய மின்தடைகளைத் தடுக்கும் நோக்கில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக ஜட்ரோ – கியூபெக் தெரிவித்துள்ளது.

