இந்த ஹாலோவீன் தினத்தை முன்னிட்டு, மொன்றியல் நகரில் உள்ள கிரிஃபின்டவுன் பகுதியில் வித்தியாசமான நாய் திருவிழா ஒன்று நடைபெற்றுள்ளது.
அங்குள்ள உள்ளரங்க நாய் பூங்காவில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாய்கள் தங்களது உரிமையாளர்களுடன் கலந்துகொண்டன.
ஹாலோவீன் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வித்தியாசமான மற்றும் அச்சமூட்டும் ஆடைகளை அணிந்துகொண்ட நாய்கள், தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தின.
இதன்போது, மிகவும் பயமுறுத்தும் ஆடை அணிந்த நாய், சிறந்த உரிமையாளர் மற்றும் நாய் இணை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்குப் பரிசுகளும் விருதுகளும் வழங்கப்பட்டன.
வழக்கமான ஹாலோவீன் கொண்டாட்டங்களுக்கு மத்தியில், செல்லப்பிராணிகளையும் இணைத்துக்கொண்ட இந்த நிகழ்வு, நாய் உரிமையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
