இன்றைய தினம் (30) மாலை 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட பரந்தன் பகுதியில் அமைந்துள்ள கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு வழங்கல் நிகழ்வு இடம்பெற்றது
இவ் நிகழ்வானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு மலேஷியா தமிழ் மன்றத்தின் நிதி அனுசரணையில் வன்னி மாவட்ட இளையோர் ஒன்றியத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாணத்தில் வறிய பிரதேசங்களில் வாழும் முன்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவு பொருட்கள் வழங்கல் மற்றும் விசேட உணவு வழங்கல் எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இவ் நிகழ்வில் இன்றைய தினம் 515 மாணவர்கள் பயணம் அடைய கூடியவாறு 19 முன்பள்ளிகளுக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டன மற்றும் குறித்த நிகழ்வில் கிளிநொச்சி வடக்கு வலய கல்விப்பணிப்பாளர் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

