நடிகர் யோகி பாபு மற்றும் சத்யா இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘கோல்டன் பாக்கியம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
‘ரங்கபலி’ படத்தை இயக்கிய பவன் பாசம்செட்டி இந்தப் படத்தை இயக்குகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளை இணைக்கும் வகையில் இப்படம் உருவாகி வருகிறது.
வெளியாகியுள்ள டைட்டில் கிளிம்ப்ஸில், இட்லி–சாம்பார் மற்றும் பிரியாணி தொடர்பான நகைச்சுவையான உரையாடலுடன் யோகி பாபு மற்றும் சத்யா அறிமுகமாகின்றனர்.
காதல், கிரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஜெயஸ்ரீ, அதிராஜ், வென்னேல கிஷோர், ரோகிணி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
பவன் சி.ஹெச் மற்றும் நிதிஷ் ஜான் இசையமைக்க, பப்லு அஜு ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.
இப்படம் இந்த ஆண்டுக்குள் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

