Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

கனடாவின் கடல்சார் பாதுகாப்புக்கு $1.2 பில்லியன் நிதி

செப்டம்பர் 30, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

நாட்டின் கடலோரப் பகுதிகள் மற்றும் கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், $1.2 பில்லியன் கனடிய டொலர் மதிப்பிலான பாரிய நிதியுதவித் திட்டத்தை பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் நார்த் வென்கூவர் நகரில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரைநிகழ்த்தியபோதே, பிரதமர் மார்க் கார்னி இப்புதிய கொள்கை அறிவிப்பை வெளியிட்டார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் அதேவேளையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மை இலக்கு என, பிரதமர் மார்க் கார்னி தனது உரையில்,  குறிப்பிட்டார்.

2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டின் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் 30 சதவீதத்தைப் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக மாற்றுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் 1 சதவீதமாக இருந்த பாதுகாக்கப்பட்ட கடல் பகுதி தற்போது 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த நான்கு ஆண்டுகளில் கடல்வாழ் உயிரினங்கள், திமிங்கலங்கள் மற்றும் சால்மன் மீன் வகைகளைப் பாதுகாப்பதற்காக $740 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வடக்குக் கரைப் பிராந்தியப் பாதுகாப்பிற்காகவும், பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் கூடிய கடல்சார் நிர்வாகத்தை வலுப்படுத்தவும் $186 மில்லியன் டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

எதிர்வரும் மே மாதம் கனடா தலைமை தாங்கி நடத்தவுள்ள 12 ஆவது சர்வதேச ‘எங்கள் பெருங்கடல் மாநாட்டின்’ (Our Ocean Conference) முன்னோடியாக இத்திட்டம் பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக்கின் பாதாள உலக போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு முறியடிப்பு: 15 சந்தேகநபர்கள் கைது!
அடுத்த செய்தி மொன்றியலில் தீவிரமடையும் வீட்டுவசதி நெருக்கடி – கட்டடத்தை ஆக்கிரமித்து போராட்டம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடா

ஓய்வுபெற்ற போர் விமானி ஸ்டீபன் ஃபருக்கு புதிய நியமனம்

செப்டம்பர் 7, 2026
கனடாமுதன்மை செய்தி

ரோலக்ஸ் கடிகாரத்தை திருடிய வழக்கின் மீதான விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 7, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவின் நயாகரா பகுதியில் பாரியளவில் வாகனக் கொள்ளையில் ஈடுபட்ட 30 பேர் கைது!

அக்டோபர் 5, 2025
கனடாமுதன்மை செய்தி

கூகுள் மேப்ஸில் ‘லேக் அமெரிக்கா’ – மீண்டும் ‘லேக் ஒன்டாரியோ’ பெயரை மீட்ட கனடா.

ஆகஸ்ட் 31, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?