மொன்றியலில் கடந்த ஜனவரி மாதம் ஏற்பட்ட நீண்ட நேர மின்தடை தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள கொரோனர் அறிக்கை அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது.
மொன்றியாலின் Notre-Dame-de-Grâce பகுதியில் வசித்த 87 வயதான Sheila என்ற பெண், மின்சாரம் இல்லாமல் கிட்டத்தட்ட 36 மணி நேரம் இருந்த பின்னர் கடும் உடல் வெப்பநிலை குறைவால் உயிரிழந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த நேரத்தில் ஏற்பட்ட கடும் குளிரான சூழ்நிலையில், வீட்டில் வெப்பத்தை பராமரிப்பது சிரமமாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனர் அறிக்கையின்படி, மின்தடை ஏற்பட்ட பின்னர் அந்தப் பெண் கடுமையான hypothermia-வால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் அவர் உயிரிழந்தார்.
இந்த மின்தடைக்கு Hydro-Québec-ன் Hampstead துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட உபகரணக் கோளாறு காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் சுமார் 15,000 வாடிக்கையாளர்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டிருந்தனர்.
