Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

கால்நடை வைத்திய அதிகாரிகளின் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு

செப்டம்பர் 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கால்நடை வைத்திய அதிகாரிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காணத் தயாராக இருப்பதுடன், பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் முறை தொடர்பில் மறுபரிசீலனை செய்து விரைவாகத் திருத்தங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றபோதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது வடக்கு மாகாண கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்,

தமது பதவியுயர்வுகளுக்கான புள்ளித் திட்டமிடலில் பாரபட்சம் காணப்படுவதாகக் குறிப்பிட்டு, அதனை மறுபரிசீலனை செய்து மாற்றியமைக்க வேண்டும். தமக்கு இதுவரை நடைமுறைக்கு ஏற்ற கடமைப் பட்டியல் வழங்கப்படவில்லை , அதனை உரிய முறையில் தயாரித்து வழங்க வேண்டும்

அலுவலகக் கடமைகள் மற்றும் வெளிக்கள சிகிச்சைப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏற்ற வகையிலான வரவுப் பதிவு நடைமுறை இல்லாதுள்ளது என கால்நடை வைத்திய அதிகாரிகள் பல ஆண்டுகளாக தமது சேவையை வினைத்திறனுடன் வழங்குவதில் பல்வேறு நிர்வாக மற்றும் பணிசார் இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் சங்கப் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர் நா.வேதநாயகன்,

எந்தவொரு விடயத்துக்கும் கலந்துரையாடல் மூலமே தீர்வு காண முடியும். ஒரு முடிவை எடுத்துவிட்டு, அதனை நடைமுறைப்படுத்தப் போவதாக அறிவித்த பின்னர் கலந்துரையாடுவதற்கு இடமில்லை. எனவே, நீங்கள் முன்வைக்கும் பிரச்சினைகளை உரிய முறையில் கலந்துரையாடித் தீர்வு காண நாங்கள் தயாராக இருக்கின்றோம்

அதிகாரிகளுக்கும் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கும் இடையில் நல்ல உறவு நிலவுவது அவசியம். அத்தகைய நல்லுறவு காணப்படும் போதுதான் பண்ணையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதுடன், உங்களது பணிச்சூழலையும் சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும்.

நிர்வாகத்தின் மீதான அல்லது அதிகாரிகள் மீதான அதிருப்தியைப் பண்ணையாளர்கள் மீது வெளிப்படுத்தக்கூடாது.

பதவியுயர்வுக்கான புள்ளித் திட்டமிடல் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுபரிசீலனை செய்து, தேவையான திருத்தங்களை விரைவாக மேற்கொண்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

வருகைப் பதிவு தொடர்பில் கைவிரல் அடையாள முறையைப் பின்பற்றுவது பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கைக்கு உட்பட்ட விடயம் என்பதால் அதனை மீற முடியாது. இருப்பினும் பணியாற்றும் கால்நடை வைத்திய அதிகாரிகளுக்குரிய கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான பொருத்தமான பொறிமுறையொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், கால்நடை வைத்திய அதிகாரிகளால் கோரப்பட்டுள்ள கடமைப் பட்டியல், ஆளணி உள்ளிட்ட ஏனைய பணிசார் விடயங்கள் தொடர்பில் அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாணப் பணிப்பாளர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை இணைத்துக் கொண்டு விரிவாக ஆராய்வதற்கான கலந்துரையாடல் ஒன்றை விரைவில் ஏற்பாடு செய்வோம் என ஆளுநர் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர் மற்றும் அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடக்கு மாகாணக் கிளை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்தி பெரும் முதலாளிகளின் கடலட்டை வளர்ப்பால் சிறு மீனவர்கள் பாதிப்பு
அடுத்த செய்தி மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் 36 மணி நேரம் – 87 வயது பெண் உயிரிழப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

தொட்டலங்க கண்ணாவிற்க்கு ஆயுள் தண்டனை உத்தரவு!

அக்டோபர் 11, 2025
இலங்கை

தெதுரு ஓயாவின் 6 வான்கதவுகள் திறப்பு!

நவம்பர் 23, 2025
இலங்கை

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட கிருமி நாசினிகள் – வேலணையில் மூவர் கைது

பிப்ரவரி 3, 2025
இலங்கை

பெண் தலைமையிலான குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

செப்டம்பர் 27, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?