கியூபெக் மாகாணம், லெவிஸ் (Lévis) நகரில் இயங்கி வரும் ‘கொம்ப்துவார் லே கிரெனியே’ (Comptoir Le Grenier) எனும் சமூக நல உணவு வங்கியின் குளிர்சாதன அமைப்புகளுக்கு இணைக்கப்பட்டிருந்த செப்பு கம்பிகள் (Copper wires) அறுக்கப்பட்டுத் திருடப்பட்டுள்ளன.
இதனால் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காமல் போகி, ஏழை மக்களுக்கு வழங்குவதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த $10,000 டொலர் மதிப்பிலான உணவுகள் முற்றிலும் கெட்டுப்போய் வீணாகியுள்ளன.
கம்பிகள் திருடப்பட்டமை மற்றும் பழுதுபார்ப்புச் செலவுகள் உட்பட மொத்தம் $30,000 டொலர் அளவுக்கு அந்த தொண்டு நிறுவனத்திற்குப் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், திங்கட்கிழமை அன்று நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டுப் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த லெவிஸ் நகரப் பொலிஸார் (Lévis police) தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

