Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

ஏயர் கனடா புதிய CEO மீது தொழிற்சங்கப் பழிவாங்கல் குற்றச்சாட்டு

செப்டம்பர் 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

ஏயர் கனடா (Air Canada) விமான நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாகப் (CEO) பொறுப்பேற்கவுள்ள அங்கோ வான் டெர் வெர்ஃப் (Anko van der Werff) தலைமை வகிக்கும் தற்போதைய விமான நிறுவனத்தில், தொழிலாளர் உரிமைகளுக்கு எதிரான மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, கனடிய விமானிகள் தொழிற்சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

தற்போது ஸ்காண்டிநேவியன் ஏயர்லைன்ஸ் (Scandinavian Airlines – SAS) நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகச் பணியாற்றி வரும் வான் டெர் வெர்ஃப், எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் ஏயர் கனடா நிறுவனத்தின் புதிய தலைமைப் பொறுப்பை ஏற்கவுள்ளார்.

இந்நிலையில், அவரது தற்போதைய நிர்வாகத்தின் கீழ் இடம்பெற்றுள்ள தொழிலாளர் பணிநீக்கம் தொடர்பான சம்பவம், ஏயர் கனடா ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

கனடிய சர்வதேச விமானிகள் சங்கத்தின் (ALPA Canada) தலைவர் டிம் பெர்ரி (Tim Perry), வான் டெர் வெர்ஃப்பிற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ஸ்காண்டிநேவியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தில் தொழிற்சங்கத் தலைவர் ஒருவர் நியாயமின்றிப் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்காண்டிநேவியன் ஏயர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானிகள் சங்கத் தலைவரான கென்ட் தியேல் (Kent Thiel) என்பவர், தொலைதூரப் பணியில் (Remote work) இருந்தபோது வெளிநாட்டுக்குச் சென்றார் என்ற காரணத்தைக் கூறி, ஓகஸ்ட் மாத இறுதியில் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

ஆனால், அவர் தொழிற்சங்கப் பணிகளுக்காகவே பயணித்தார் எனவும், இந்த நடவடிக்கை அப்பட்டமான தொழிற்சங்கப் பழிவாங்கல் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் மெட்ரோ நீல நிறப் பாதை பணியில் அடுத்தடுத்து விபத்துகள் – இருவர் படுகாயம்
அடுத்த செய்தி கியூபெக் உணவு வங்கியில் செப்பு கம்பிகள் திருட்டு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

எம்மவர் நிகழ்வுகள்

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

சட்டரீதியான நடவடிக்கைகளைத் மேற்கொள்ளும் மொன்ட்ரில் மாநகராட்சிப் கட்சிகள்

நவம்பர் 11, 2025
கனடா

பதவியை ராஜினாமா செய்தார் டோலி பேகம்

பிப்ரவரி 6, 2026
கனடா

ஹண்டாவைரஸ்’ தொற்று பரவல் – பிரிட்டிஷ் கொலம்பியாவில் அழைத்து வரப்பட்ட நான்கு கனடியர்கள்

மே 11, 2026
கனடா

ட்ரில்லியம் நெட்வொர்க் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை

பிப்ரவரி 3, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
imunify-bot-check
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?