இலங்கையின் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும், சாரதி உள்ளிட்ட அனைத்து பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விதிமுறை செப்டம்பர் 20ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதற்காக வழங்கப்பட்டிருந்த சலுகைக் காலத்தை நிறைவு செய்வது தொடர்பில் 2026 ஜூன் 17ஆம் திகதி 2493/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிக்குப் பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது சாரதியும், வாகனத்தில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாகனப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

