இலங்கையின் முன்னாள் விமானப்படை தளபதி டொனால்ட் பெரேரா, நிதி மோசடி விசாரணைப் பிரிவான FCID முன்னிலையில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மிக் விமான கொள்வனவு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே அவர் FCID-க்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கொள்வனவு தொடர்பான விடயங்கள் குறித்து முன்னாள் விமானப்படை தளபதியிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விசாரணைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

