Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்

அலெக்சாண்டர் வட்டமானு சலாமன்கா கொலையை ஒப்புக்கொண்ட எரோ சவாடோகோ

செப்டம்பர் 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

மொன்றியல் நகரிலுள்ள ‘ப்ளேட்டோ-மொன்-ரோயல்’ (Plateau-Mont-Royal) பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலையில், தொடர்புடைய எரோ சவாடோகோ (Yero Savadogo) என்பவர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

23 வயதான அலெக்சாண்டர் வட்டமானு சலாமன்கா (Alexandre Vatamanu Salamanca) என்பவரைக் கொலை செய்த வழக்கில், முதலில் எரோ சவாடோகோ மீது இரண்டாம் நிலை கொலைக்  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இருப்பினும், கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி அலெக்சாண்டர் பியென்-அமே (Alexandre Bien-Aimé) முன்னிலையில் நடைபெற்ற விசாரணையின் போது, குற்றச்சாட்டு சாமானிய கொலைக் குற்றமாக குறைக்கப்பட்டதை அடுத்து, அவர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டார்.

2024 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இச்சம்பவத்தின் பின்னணி குறித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்படி, மூன்று வெவ்வேறான குழுக்களுக்கு இடையே சமூக ஊடகங்களில் (Social Media) எழுந்த சிறு தகராறே, இந்த வன்முறைக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

சமூக ஊடக மோதல் முற்றிய நிலையில், ‘ப்ளேட்டோ-மொன்-ரோயல்‘ பகுதியிலுள்ள ஒரு கட்டிடத்தின் வாகன நிறுத்துமிடத்தில் இக்குழுக்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இந்த மோதலில் கத்திகளுடன் கூடிய குழுத் தாக்குதலில் ஈடுபட்டதாக  எரோ சவாடோகோ  ஒப்புக்கொண்டுள்ளார்.

சவாடோகோ, பாதிக்கப்பட்டவரை இருமுறை கத்தியால் குத்திய போதிலும், அது மரணத்தை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தான தாக்குதலாக இருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

தற்போது, குற்றத்தை ஒப்புக்கொண்ட எரோ சவாடோகோவுக்கு சுமார் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி மொன்றியல் வில் மேரி நகர நகைக்கடை கொள்ளை – ஐவர் மீது குற்றச்சாட்டு பதிவு
அடுத்த செய்தி ஒட்டாவாவில் புதிய தொடர்பு அலுவலகத்தை திறக்கவுள்ள ஐரோப்பிய பாராளுமன்றம்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கியூபெக்முதன்மை செய்தி

மேலீன் லூகெஸின் மரணம் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

நவம்பர் 13, 2025
கியூபெக்முதன்மை செய்தி

Jacques-Cartier மேம்பாலத்தின் அடிப்பகுதியில் தற்காலிகக் கூடாரம் ஒன்றிற்குள் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்பு

ஜூன் 26, 2026
கியூபெக்

மொன்றியலில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

டிசம்பர் 19, 2025
கியூபெக்முதன்மை செய்தி

10 வயது சிறுவன் மீது கொதி நீரை ஊற்றிய நபருக்கு 27 மாத சிறை தண்டனை

ஜனவரி 29, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?