Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கியூபெக்முதன்மை செய்தி

டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குக் கியூபெக் ஒருபோதும் பணியாது என உறுதியளித்தார் மாகாண முதல்வர்!

செப்டம்பர் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவுடனான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்குக் கியூபெக் மாகாணம் ஒருபோதும் பணியாது என கியூபெக் முதல்வர் கிறிஸ்டின் ஃப்ரெஷெட் (Christine Fréchette) திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பதிலடி வரிகள் அமலுக்கு வந்துள்ள சூழலில், கியூபெக் மாகாணத்தின் வேலைவாய்ப்புகளையும் பொருளாதாரத்தையும் பாதுகாக்க, தங்களின் வசமுள்ள அனைத்து அதிகாரங்களையும் கருவிகளையும் தமது அரசு முழுமையாகப் பயன்படுத்தும் என்றும் கியூபெக் முதல்வர் கிறிஸ்டின்
ஃப்ரெஷெட் உறுதியளித்துள்ளார்.

இன்று ஊடகவியலாளர்களுக்கு ஆங்கிலத்தில் கருத்துத் தெரிவித்த கியூபெக்  முதல்வர் ஃப்ரெஷெட், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கனடா விதித்துள்ள பதிலடி வரிகளால் கியூபெக் வர்த்தகக் கட்டமைப்பிற்கு ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வதற்கு, தமது அரசு
தயாராக உள்ளதாகக் குறிப்பிட்டார்.

மொண்ட்ரியலைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் முன்னணி விமான உற்பத்தி நிறுவனமான 'பாம்பார்டியர் (Bombardier) மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் ட்ரூத் சோஷியல் (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் கடுமையான சாடலை வெளியிட்டிருந்தார். அமெரிக்காவில் உற்பத்திகளை மேற்கொள்ளாவிட்டால் பாம்பார்டியர் விமானங்கள் அமெரிக்கச் சந்தையில் விற்பனை செய்யப்பட அனுமதிக்கப்படாது என டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இது குறித்துப் பேசிய கியூபெக் முதல்வர் ஃப்ரெஷெட், ”டிரம்பின் இத்தகைய பதிவுகள் சில வேளையில் பெரிய கொள்கை மாற்றங்களுக்கான முன்னோடியாக அமையும்” என்றும், ”சில வேளையில் எவ்வித விளைவுகளையும் ஏற்படுத்தாமல் முடிந்துவிடும்” என்றும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், நிலைமையை, தமது அரசு கூர்ந்து கவனித்து வருவதாகவும், பாம்பார்டியர் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியுடன் (CEO) தாம் ஏற்கனவே தொடர்பில் இருப்பதாகவும் கியூபெக்
முதல்வர் தெரிவித்தார்.

முந்தைய செய்தி கனடா–அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரம்: புதிய பதிலடி வரிகள் அமுல்!
அடுத்த செய்தி கனடா–அமெரிக்க வர்த்தகப் போர்: மிச்சிகனில் தேர்தல் களம் சூடுபிடிப்பு!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

கனடிய இராணுவ படைப்பிரிவொன்றின் தளபதி பதவி விலகியுள்ளார்

ஜூலை 29, 2025
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் தொடரும் காட்டுத்தீ – ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

ஆகஸ்ட் 23, 2026
கியூபெக்

மொன்றியல் பொலிஸாருக்கு எதிராக அவதூறுப் பரப்பிய 24 வயது இளைஞர் கைது

ஜூலை 21, 2026
கியூபெக்

மொன்றியல் பகுதியில் 16 மாதக் குழந்தை மீது கார் மோதல் – குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி.

ஆகஸ்ட் 8, 2026
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?