சவுதி அரேபியாவின் தெற்கு பகுதிகளை இலக்குவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 73 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்ஹா, ஜிசான் மற்றும் நஜ்ரான் உள்ளிட்ட பகுதிகளை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதல்களில் சவுதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் பதற்றத்திற்கு மத்தியில் இடம்பெற்றுள்ள இந்த தாக்குதல்கள், பிராந்திய பாதுகாப்பு நிலைமை குறித்து மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.

