Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
இலங்கை

வவுனியா மேல்நீதிமன்றில் பாலியல் வன்கொடுமைக் குற்றத்திற்கு 40 ஆண்டுகள் கடூழியசிறை

செப்டம்பர் 4, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE
13 வயதே நிரம்பிய தன்னுடைய சொந்த மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு 40 வருட கால கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா அவர்கள் நேற்று (03/09/2026) தீர்ப்பளித்துள்ளார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், வவுனியாவில் இக்குற்றச்செயல் இடம்பெற்றுள்ளது.
 சம்பவம் நடந்த போது 13 வயதாக இருந்த பாதிக்கப்பட்ட சிறுமி இருந்துள்ளார்.
இது தொடர்பான வழக்கின் குற்றச்சாட்டுப் பத்திரம் 2024ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்தன. எதிரி மீதான குற்றச்சாட்டு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால், எதிரி குற்றவாளியாகக் காணப்பட்டு தீர்ப்பு நேற்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலத்தில் குறித்த சிறுமி தந்தையின் பாதுகாப்பிலே வசித்து வந்துள்ள நிலையில் இரண்டு சந்தர்ப்பங்களில் இந்தக் குற்றச்செயல்கள் இடம்பெற்றுள்ளன.
இரு சந்தர்ப்பங்களிலும் தந்தை போதைப்பொருள் உபயோகித்து விட்டு வீட்டிலே வைத்து குறித்த குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார்.
இந்த நிகழ்வுகளால் குறித்த சிறுமி கருத்தரித்ததுடன், மகப்பேறு மருத்துவர், மனநல வைத்தியர், சட்ட வைத்திய அதிகாரி கொண்ட குழாம் சிறுமியைப் பரிசோதித்து அவருக்கு ஒரு குழந்தையைத் தாங்கக்கூடிய உடல் வலு, மனத்திடம் மற்றும் முதிர்ச்சி இல்லை என்றதன் அடிப்படையில் சட்ட ரீதியான கருக்கலைப்பை மேற்கொண்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது, சொந்தத் தந்தையாலேயே இக்குற்றச்செயல் புரியப்பட்டுள்ளமை, சிறுமிக்கு ஏற்பட்ட கடுமையான உடல் மற்றும் உளவியல் பாதிப்புகள், மேலும் இனி வரும் காலங்களில் இப்படியானதொரு குற்றம் நடைபெறாமல் தடுக்கும் நோக்கம் ஆகியவற்றை நீதிமன்றம் கருத்திலே கொண்டு கடுமையான தண்டனையை வழங்கியுள்ளது.
இதன் பிரகாரம் 40 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும்  100,000/- அபராதமும்  அதனை செலுத்தத் தவறின் மேலதிக 1 வருடம் சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1,000,000/- இழப்பீடும் (ஒரு மில்லியன் ரூபாய்) நஷ்டஈடு செலுத்த வேண்டுமெனவும் அதனை செலுத்தத் தவறின் மேலதிக 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பும் தண்டனையும் குறித்த சிறுமியின் நலன்களை பாதுக்கும் முகமாகவும், சமூகத்தில் ஒரு பாரதூரமான குற்றச்செயல் இடம்பெறின் நீதிமன்றங்கள் கடுமையான தண்டனையை வழங்கும் என்ற எண்ணப்பாட்டை விதைக்கும் முகமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
முந்தைய செய்தி கொழும்பு, புறநகர்ப் பகுதிகளில் நீர் விநியோகத் தடை நீடிப்பு
அடுத்த செய்தி பொரலஸ்கமுவவில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஆத்மஜோதி தமிழர் இணையத்தின் முத்தமிழாராம் 2026

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

இலங்கை

2025ம் ஆண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்!

ஆகஸ்ட் 17, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

மின்னல் எச்சரிக்கை விடுத்த வளிமண்டலவியல் திணைக்களம்

பிப்ரவரி 20, 2026
இலங்கை

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் – வளிமண்டலவியல் திணைக்களம்

ஜனவரி 21, 2026
1
அண்மைய செய்திகள்இலங்கை

மீண்டும் கூட்டமைப்பை உருவாக்க முயற்சித்தோம் – தமிழரசு நீலிக்கண்ணீர்

மார்ச் 1, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?