2024 ஆம் ஆண்டில் தேயிலை ஏற்றுமதி மூலம் இலங்கை 1.43 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை 2024 இல் 245.79 மில்லியன் கிலோ தேயிலையை ஏற்றுமதி செய்துள்ளது. இது 2023 இல் 241.91 மில்லியன் கிலோவாக இருந்தது.
தேயிலை தொழில்துறை இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய தொழில்துறையாகும். இலங்கையின் தேயிலை இறக்குமதியில் ஈராக் முதலிடத்திலும், ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் அடுத்த இடத்திலும் இருப்பதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.