Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடாமுதன்மை செய்தி

கனடாவில் அதிகரிக்கும் குடிவரவு வழக்குகள்: Federal Court மீது கடும் அழுத்தம்!

ஆகஸ்ட் 29, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

கனடாவில் கடந்த ஆறு ஆண்டுகளில் குடிவரவு தொடர்பான வழக்குகள் பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், Federal Court-இன் பணிச்சுமை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக அதன் தலைமை நீதிபதி ஆலன் டைனர் தெரிவித்துள்ளார்.

விசா விண்ணப்பங்கள், அகதி கோரிக்கைகள், கனடாவுக்குள் அனுமதி, நாடுகடத்தல் உள்ளிட்ட பல்வேறு குடிவரவு விவகாரங்கள் தொடர்பான வழக்குகளை Federal Court விசாரித்து வருகிறது.

ஜூலை 6ஆம் தேதி Federal Court-இன் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற ஆலன் டைனர், தாம் 2014ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் இணைந்தபோது ஆண்டுக்கு சுமார் 5,000 முதல் 6,000 குடிவரவு வழக்குகள் மட்டுமே பதிவாகியதாக தெரிவித்துள்ளார்.

எனினும், 2021ஆம் ஆண்டு முதல் வழக்குகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அந்த ஆண்டில் சுமார் 9,700 குடிவரவு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு மட்டும் அந்த எண்ணிக்கை 33,000-ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையான காலப்பகுதியில் மட்டும் 14,000-க்கும் அதிகமான குடிவரவு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 28,000 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் பணியாற்றி வருவதாக தெரிவித்த டைனர், இரவு நேரங்கள், வார இறுதிகள் மற்றும் விடுமுறை நாட்களிலும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

COVID-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் நிரந்தர மற்றும் தற்காலிக குடியேற்றங்களின் எண்ணிக்கையும், கனடாவில் அகதி அந்தஸ்து கோருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளமை குடிவரவு வழக்குகளின் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகக் குறிப்பிடப்படுகிறது.

இதனிடையே, கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட Bill C-12 எல்லைப் பாதுகாப்புச் சட்டமும் Federal Court-இன் பணிச்சுமையை மேலும் அதிகரித்துள்ளதாக தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டத்தின் கீழ், கனடாவுக்கு வந்த முதல் ஒரு ஆண்டுக்குள் அகதி கோரிக்கையை தாக்கல் செய்யாத சில நபர்களின் கோரிக்கைகளை Immigration and Refugee Board விசாரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஏற்கனவே அதிகரித்து வரும் குடிவரவு வழக்குகளுடன், Federal Court மேலும் அதிகமான நீதித்துறை மறுஆய்வு வழக்குகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிவரவு வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நீதிமன்றத்தின் தற்போதைய வளங்கள் போதுமானதாக உள்ளதா என்பது தொடர்பில் புதிய கவலைகள் எழுந்துள்ளன.

முந்தைய செய்தி நன்னீர் மீன்பிடி உற்பத்திகளை ஊக்குவிக்க கிளிநொச்சியில் உணவுக் கண்காட்சி.
அடுத்த செய்தி சீன பிரஜை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கு: சீகிரியாவில் மேலும் இரு சீனர்கள் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

கனடாமுதன்மை செய்தி

அமெரிக்காவில் நடக்கும் விடயங்களுக்கு தான் தீர்ப்பு வழங்க விரும்பவில்லை – கேரி ஆனந்த சங்கரி கருத்து

பிப்ரவரி 1, 2026
கனடாமுதன்மை செய்தி

மொன்றியல் நகரில், Rivière-des-Prairies நதிக்கரையில் மனித உடல் பாகம் கண்டெடுப்பு!

செப்டம்பர் 11, 2025
கனடாமுதன்மை செய்தி

ஈழத்தமிழர் கல்வி வாரத்துக்கு எதிரான மனுக்களை நிராகரித்த கனடா உயர் நீதிமன்றம் !

மார்ச் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

ஒன்டாரியோ மாகாண சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்

அக்டோபர் 21, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?