பிரிட்டிஷ் கொலம்பியா (BC) மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த சர்ச்சைக்குரிய ‘வெஸ்ட் கோஸ்ட் கனெக்டர்‘ (West Coast Connector) எரிவாயு குழாய் திட்டத்தை, தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மத்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
இப்பகுதியில் வாழும் பழங்குடியினத் தலைவர்களின் கடும் எதிர்ப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் கவலைகளைத் தொடர்ந்து, மத்திய நிதித்துறை அமைச்சர் மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் ஜோனதன் வில்கின்சன் ஆகியோர் இந்த முடிவை அறிவித்துள்ளனர்.
இந்தத் திட்டம் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதிப்பதாகவும், அவர்களின் பூர்வீக நிலங்களில் உரிய அனுமதியின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன.
இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தும் வரை திட்டத்தை இடைநிறுத்த மத்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த அரசாங்க முடிவை பிரிட்டிஷ் கொலம்பியா பழங்குடியினத் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.


