Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
உலகம்

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பாவின் முக்கிய தளபதி மர்ம மரணம்!

ஆகஸ்ட் 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதியான காரி சயீத் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள குபா மசூதிக்குத் தொழுகைக்காகச் செல்லும் வழியில், அங்குள்ள ஒரு உணவகத்தில் உணவருந்திய சிறிது நேரத்திலேயே அவர் மசூதியின் நுழைவாயிலில் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்தார். உணவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதால் தான் அவர் உயிரிழந்திருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

கொல்லப்பட்ட காரி சயீத் அப்துல் அஜிஸ், ஜம்மு காஷ்மீரில் இந்திய பாதுகாப்புப் படையினருடன் நடக்கும் மோதல்களில் உயிரிழக்கும் பயங்கரவாதிகளின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் இதர உதவிகளை வழங்கும் முக்கிய பிரிவை நிர்வகித்து வந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பாகிஸ்தான் போலீசார், தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்புதான், 2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் அமைப்பின் மற்றொரு முக்கிய உறுப்பினரான ரிஸ்வான் ஹனிப் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அடையாளம் தெரியாத நபர்களால் தங்களது அமைப்பைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் வேட்டையாடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.

பெஷாவர், கராச்சி, ராவல்பிண்டி, ராவலாகோட் மற்றும் முசாபராபாத் போன்ற நகர்களில் தொடர்ச்சியாக நடைபெறும் இந்த அநாமதேயத் தாக்குதல்கள் பயங்கரவாத அமைப்புகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

முந்தைய செய்தி டெங்கு நோயினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
அடுத்த செய்தி ரூ.100 கோடி சொத்து, டெஸ்லா கார், போலி ஐஏஎஸ் கார்டு: பீகாரில் ரகசிய ஏஜென்ட் என ஏமாற்றிய நபர் கைது!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

உலகம்

சர்வதேச மாணவர்களுக்கு புதிய சலுகைகளை அறிவித்தது பிரித்தானிய அரசு!

நவம்பர் 17, 2025
உலகம்

பாக் இராணுவ வீரர்கள் மீது பலூச்படையினர் தாக்குதல்!

ஜூலை 17, 2025
உலகம்

இந்தோனேசியாவில் மாயமான விமானம்

ஜனவரி 17, 2026
உலகம்

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் மற்றும் ட்ரம்ப் இடையில் சந்திப்பு!

ஆகஸ்ட் 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?