பாரம்பரிய அரிசி ரகம் கருப்பு கவுனி அரிசி இன்று அரிதாகிவிட்டது. அந்தோசினனின் என்னும் மூல வேதிப்பொருள் காரணமாக குறித்த அரிசி கருப்பு நிறமாக காணப்படுகின்றது.
கருப்பு கவுனி அரிசி சமைத்த பின் ஊதா நிறத்தில் இருக்கும். சீன அரசர்கள் தங்களின் நாட்டிற்கு வருகை புரியும் பிற நாட்டின் அரசர்கள் மற்றும் கப்பல் மூலமாக வரும் வியாபாரிகளுக்கு கருப்பு கவுனியில் செய்யப்பட்ட விருந்து அளிக்கப்பட்டது.
இதன் காரணம் இதில் உள்ள ஊட்ட சத்துக்கள். இதில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து உள்ளது. கருப்பு கவுனி அரிசியின் அந்தோசினனின் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், இருதய நோய்களைத் தடுப்பதற்கும், மூளை செயல்பட்டினை மேம்பட உதவுகின்றது.
சிவப்பு அரிசி உள்ளிட்ட மற்ற எந்த ஒரு அரிசியிலும் இல்லாத அளவு கருப்பு கவுனி அரிசி அந்தோசினனின் பாதிப்பினை தடுக்கின்றது. மேலும், இதய பாதிப்பினை தடுக்கின்றது. கருப்பு கவுனி அரிசி புற்றுநோய்க்கு எதிரானது என்பதை சீனாவில் எலிகள் மீது மேற்கொண்ட ஒரு ஆய்வில் நிரூபித்துள்ளனர்.
கருப்பு கவுனி அரிசி நார்ச்சத்து மற்றும் குறைந்த கார்போஹைட்ரேட் உள்ளதால் உடலின் தேவையற்ற கொழுப்புகளை குறைகின்றது. உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை குறைப்பதால் இதயத்தின் இரத்த குழாய்களில் கொழுப்பு சேர்வதை தவிர்க்கின்றது. இதனால் இதயம் பாதுகாக்கப்படுகின்றது.

