Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
அண்மைய செய்திகள்கனடா

சென் லோரன்ஸ் நதியில்(St. Lawrence River) சிக்கிய பாரிய சரக்குக் கப்பல் – மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

ஜூலை 24, 2026
படிக்க 2 நிமிடங்கள்
SHARE

சென் லோரன்ஸ் நதியில் (St. Lawrence River) தரைதட்டி, மேலாக நகர முடியாமல் சிக்கியிருந்த 225 மீற்றர் நீளமுடைய ‘டிம் எஸ். டூல்’ (Tim S. Dool)
என்ற பாரிய சரக்குக் கப்பலை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கோதுமையை ஏற்றிச் சென்ற இக்கப்பல், கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி ஒன்ராறியோவின் மொரிஸ்பர்க் (Morrisburg) பகுதிக்கு அருகே
அமெரிக்க நீர்நிலைப் பகுதியில் தரைதட்டி விபத்துக்குள்ளானது.

இதனைத் தொடர்ந்து, பல வாரங்களாகத் தொடர்ந்த இழுவைப்படகு (Tugboats) முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், கப்பலின் எடையைக்
குறைத்து அதை மீண்டும் மிதக்க வைப்பதற்கான விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கப்பலை மீண்டும் நீரிற்குள் கொண்டுவரும் முதற்கட்ட முயற்சிகள் பலனளிக்காததைத் தொடர்ந்தே, ‘லைட்டரிங்’; (Lightering) எனப்படும் கப்பலின் பாரத்தைக் குறைக்கும் முறையைக் கையாள்வதற்கு, கடல்சார் மீட்புக் குழுவினர் தீர்மானித்தனர்.

கப்பலில் ஏற்றிச் செல்லப்பட்ட டன் கணக்கிலான கோதுமைப் பொதிகள், விசேட கருவிகள் மூலம் சிறிய படகுகளுக்குச் (Barges) சுழற்சி முறையில் மாற்றப்பட்டு வருகின்றன.

அல்கோமா சென்ட்ரல் கோப்பரேஷன் (Algoma Central Corporation) என்ற கனடியச் நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த 57 ஆண்டுகள் பழமையான கப்பல், பிரதான கப்பல் போக்குவரத்துப் பாதைக்கு (Navigation Channel) வெளியே தரைதட்டியுள்ளதால், ஏனைய வர்த்தகக் கப்பல்களின் போக்குவரத்திற்குப் பெரிய அளவில் இடையூறு ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும், மீட்புப் பணிகள் நடைபெறும் பகுதி வழியே செல்லும் ஏனைய கப்பல்கள் குறைந்த வேகத்திலேயே பயணிக்க வேண்டும் எனக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் கப்பலை மீட்கும் முதன்மை நடவடிக்கை நடைபெறும் போது, அப்பகுதியில் செல்லும் பிற வணிகக் கப்பல்களின் பாதுகாப்பைக்
கருத்திற்கொண்டு சென் லோரன்ஸ் நீர்வழியின் குறிப்பிட்ட பகுதி சில மணிநேரங்களுக்குத் தற்காலிகமாக மூடி வைக்கப்படும் என அமெரிக்க
மற்றும் கனடியக் கடலோரக் காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

கப்பல் தரைதட்டியமைக்கான துல்லியமான காரணம் குறித்து அமெரிக்க மற்றும் கனடிய அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவத்தில் கப்பல் ஊழியர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதும், நதியில் எந்தவிதமான எண்ணெய்க் கசிவோ அல்லது சுற்றுச்சூழல் மாசுபாடோ பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி கியூபெக் – லோங்வே மெட்ரோ ரயில் நிலையத்தில் நள்ளிரவில் மோதல் — பொலிஸார் தீவிர விசாரணை!
அடுத்த செய்தி திறக்கப்பட்டது கனடா – அமெரிக்காவை இணைக்கும் ‘கோர்டி ஹோவ்’ சர்வதேச பாலம் — எதிர்வரும் 27ஆம் திகதி வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி!

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்

எம்மவர் நிகழ்வுகள்

செம்மண் இரவு

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்இலங்கை

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மே 2, 2026
கனடா

தண்ணீர் கட்டணத்தை குறைக்க தீர்மானித்துள்ள ஹாலிஃபாக்ஸ் வாட்டர் நிறுவனம்

டிசம்பர் 26, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

20 ஆயிரம் ரூபாவால் குறைந்த தங்கத்தின் விலை!

அக்டோபர் 18, 2025
அண்மைய செய்திகள்இலங்கை

கண்டியில் 36 மணிநேர நீர்வெட்டு!

மே 28, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?