Eye Tamil FM
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
மேலும் செய்திகள்
  • அரசியல் களம்
  • ஆய்வுக் கட்டுரை
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • தாயக வலம்
  • தொழில்நுட்பம்
ஏனையவை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Listen Live
Watch Live
Font ResizerAa
Eye Tamil FM
Listen
Watch
Search
  • முகப்பு
  • கனடா
  • கியூபெக்
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • விளையாட்டு
  • தாயக வலம்
  • அரசியல் களம்
  • ஆரோக்கியம்
  • ஆன்மீகம்
  • ஆய்வுக் கட்டுரை
  • துயர் பகிர்வு
  • எம்மவர் நிகழ்வுகள்
  • தொடர்பு கொள்ள
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
கனடா

சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணி கனடாவிற்குள் பரவவில்லை – பொதுச் சுகாதார முகமை

ஜூலை 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்
SHARE

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் ‘சைக்ளோஸ்போரா’ (Cyclospora) எனப்படும் ஆபத்தான ஒட்டுண்ணியால் பரவும் வயிற்றுப்போக்கு நோய் மிக வேகமாகப் பரவி வரும் போதிலும், தற்போதைய நிலவரப்படி இந்தத் தொற்று கனடாவிற்குள் பரவவில்லை என்று கனடாவின் பொதுச் சுகாதார முகமை (PHAC) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மிச்சிகன் மாநிலத்தில் கடந்த வாரம் 170 பேருக்கு மாத்திரமே உறுதி செய்யப்பட்டிருந்த இந்த ஒட்டுண்ணித் தொற்று (Cyclosporiasis), தற்போது 1,250 க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரே நாளில் சுமார் 260 புதிய தொற்றாளர்கள் கண்டறியப்பட்டு, மிக குறுகிய காலத்தில் பாதிப்பு எண்ணிக்கை தீவிரம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொராண்டோவின் பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பு (University Health Network) தொற்றுநோய்ப் பிரிவின் தலைவர் சுசி ஹோட்டா (Dr. Susy Hota) இது குறித்து விளக்குகையில், “மிச்சிகனில் ஒட்டுண்ணித் தொற்று ஏற்பட்ட உணவுப் பொருட்கள் அங்கேயே உள்ளூர் மட்டத்தில் விநியோகிக்கப்பட்டதாகவோ அல்லது தயாரிக்கப்பட்டதாகவோ இருக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.

கனடாவின் பொதுச் சுகாதார முகமையின் செய்தித் தொடர்பாளர் மார்க் ஜான்சன் (Mark Johnson) கருத்துத் தெரிவிக்கையில், கனடாவில் தற்போது சைக்ளோஸ்போரா ஒட்டுண்ணிப் பரவல் தொடர்பாக எந்தவொரு விசாரணையும் முன்னெடுக்கப்படவில்லை என்றும், நாட்டின் குடிநீர் விநியோகக் கட்டமைப்பில் இந்த ஒட்டுண்ணி கலப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லை என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

முந்தைய செய்தி காக்கைதீவில் உள்ள கழிவு மீள் சுழற்சி மையத்தை அகற்ற கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த கியூபெக் முதல்வர்

வாராந்திர செய்திகள்

இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

எம்மவர் நிகழ்வுகள்

MEGA BLAST

ஏனைய நிகழ்வுகளை பார்க்க

துயர் பகிர்வு

மரண அறிவித்தல்

WhatsApp Image 2026-07-31 at 7.45.39 PM
மரண அறிவித்தல்
sri lanka
Montreal

கண்ணீர் அஞ்சலி

491984861_693046839743805_6130371285525759386_n (1)
அமரர் .ராஜசிங்கம் நடனசிங்கம்
இலங்கை
SriLanka

கண்ணீர் அஞ்சலி

IMG-20250306-WA0029 (1)
அமரர் .இந்திரலிங்கம் பாக்கியராணி
துன்னாலை தெற்கு
canada
ஏனைய துயர் பகிர்வுகளை பார்க்க

தொடர்புடைய செய்திகள்

அண்மைய செய்திகள்கனடா

அவசரப் பிரிவு மருத்துவப் பணியை கைவிடும் மருத்துவர்கள் – அதிர்ச்சி தரும் தேசிய ஆய்வு!

ஜூலை 27, 2026
கனடாமுதன்மை செய்தி

வான்கூவரில் 2 வயது குழந்தை காணாமல் போனது குறித்து ஆம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது!

மார்ச் 13, 2025
கனடா

டொரண்டோவில் தீ விபத்து

நவம்பர் 29, 2025
கனடாமுதன்மை செய்தி

குழந்தைகளை அனுமதியின்றி படம்பிடித்தமை தொடர்பான விசாரணை ஆரம்பம்

ஜூலை 25, 2025
Follow US
© 2026 Eye Tamil Media Network | All Rights Reserved
  • முகப்பு
  • EyeTamil TV
  • EyeTamil News
  • தொடர்பு கொள்ள
Welcome Back!

Sign in to your account

பயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரி
கடவுச்சொல்

கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?